என்னை யாரும் தடுக்க முடியாது!! -பெண் சாமியார் அன்னபூரணி மீண்டும் ஆவேசம்-

ஆசிரியர் - Editor II
என்னை யாரும் தடுக்க முடியாது!! -பெண் சாமியார் அன்னபூரணி மீண்டும் ஆவேசம்-

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் - ராஜாதோப்பு பகுதியில் அன்னபூரணி என்ற பெண் சாமியார் ஆசிரமம் அமைத்து நடத்தி வருகின்றார். 

அவர் அம்மன் போல வேடமிட்டு நடனம் ஆடிக்கொண்டே பக்தர்களுக்கு தீட்சை கொடுப்பதால் நடன சாமியார் என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் சாமியார் அன்னபூரணி பக்தர்களுக்கு தீட்சை கொடுக்க அவர்களிடம் பணம் வசூலிப்பதாக பக்தர் ஒருவர் குற்றச்சாட்டு கூறி இருந்தார். இது தொடர்பாக சாமியார் அன்னபூரணி ஆவேசமாக விளக்கமளித்துள்ளார். 

கடந்த 6 வருடங்களாகவே ஆன்மீக தேடுதலில் இருப்பவர்கள் இங்கு வந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களிடம் தீட்சைக்கு குரு தட்சணை வாங்கி ஒவ்வொருவருக்கும் ஆன்மீக அனுபவம் கொடுக்கிறேன்.

ஒவ்வொருவரையும் இறைநிலையில் நிலைபெற வைத்துக் கொண்டு இருக்கிறேன். இங்கு இலவசத்துக்கு மதிப்பு இல்லை. இந்த நிமிடம் வரை மக்கள் இங்கு வந்து பயன் அடைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆன்மீகம் என்ற பெயரில் எவ்வளவோ, பித்தலாட்டம், மோசடிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. போலி வேஷம் போட்டுக் கொண்டு ஏமாற்றுகிறார்கள். நான் இங்கு உண்மையான சக்தியையும், ஆன்மீகத்தையும் போதித்து கொண்டு தான் இருக்கிறேன். 

இயற்கை கொடுத்த வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். என்னை உணர்ந்து வருகிற மக்களுக்கு ஆன்மீக தீட்சை கொடுத்து ஆசீர்வாதம் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன். நான் தீட்சை கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு