அமைச்சர் டக்ளஸ் - திருக்கோணேஷ்வரர் ஆலய நிர்வாகத்துடன் சந்திப்பு..! சைவ மத நம்பிக்கைகள் பாதுகாக்கப்படும் என உத்தரவாதம்..
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - திருக்கோணஷ்வரர் ஆலய பரிபாலன சபையினர் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் வகையில்,
ஆலயத்தின் சுற்றுச் சூழலில் இடம்பெறும் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில்,
அதுதொடர்பாக ஆராயும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருமலைக்கான விஜயத்தினை நேற்று மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
“இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மதங்களின் விழுமியங்களும் நம்பிக்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போதைய அரசாங்கம் இருகின்றது.
இந்நிலையில், எந்தவொரு மதத்தினதும் நம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமாயின் அதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”
என்று தெரிவித்தார்.