2.0 வசூலை முறியடிக்கும் 'பொன்னியின் செல்வன்'
பிரபல இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
தமிழகத்தைத் தவிர வெளிநாடுகளில் அமெரிக்காவில் தான் இந்தப் படம் அதிக வசூலைக் குவித்து வருகிறது. படம் வெளியான கடந்த வார இறுதி நாட்களில் மட்டுமே இப்படம் 4 மில்லியன் அமெரிக்க டொலர் வசூலை அள்ளியது. இப்போது 5 மில்லியன் அமெரிக்க டொலர் வசூலைக் கடந்துள்ளதாக படத்தை அங்கு வெளியிட்டுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்றும் நாளையும் வசூலாகும் தொகையுடன் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படத்தின் அமெரிக்க வசூலை 'பொன்னியின் செல்வன்' முறியடித்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
அதன் மூலம் 40 கோடிக்கும் அதிகமான வசூலை அமெரிக்காவில் மட்டும் பெற்றுவிடும். அமெரிக்காவில் எதிர்பார்த்ததை விடவும் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.