நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள லிட்ரோ நிறுவனம்..!

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள லிட்ரோ நிறுவனம்..!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இதன்படி சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் சிலிண்டர் 271 ரூபாவாலும், 5 கிலோகிராம் சிலிண்டர் 107 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 48 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக 

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு