மோட்டார் சைக்கிலில் சாகசம் செய்த இளைஞர்!! -நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம்-

ஆசிரியர் - Editor II
மோட்டார் சைக்கிலில் சாகசம் செய்த இளைஞர்!! -நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம்-

இந்தியாவின் சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக மோட்டார் சைக்கிலில் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தை சேர்ந்த இளைஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன தண்டனை ஒன்றை வழங்கியுள்ளது. 

கடந்த 8 ஆம் திகதி சென்னை அண்ணா சிலையில் இரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர் மோட்டார் சைக்கிலில் சாகத்தில் ஈடுபடும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. இது குறித்து சென்னை பாண்டிபஜார் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

மோட்டார் சைக்கிலில் சாகசத்தில் ஈடுபட்ட இடமான தேனாம்பேட்டை வீதியில் வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு குறித்த இளைஞருக்கு பிணை வழங்கியது.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை பைக் சாகசத்தில் ஈடுபட்ட இடமான தேனாம்பேட்டையில் நின்று கொண்டு வீதி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அலெக்ஸ் பினோய் விநியோகம் செய்துவாகன விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு