நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு!!

ஆசிரியர் - Editor II
நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு!!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் நிலச்சரிவில் சிக்கி புதைந்தன.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் தர்சாலி கிராமம் அருகே பாறைகள் கீழே உருண்டு விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பாதுகாப்பாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணி முடிந்ததும் போக்குவரத்து தொடங்கும் என ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலச்சரி காரணமாக போக்குவரத்து துண்டிப்ப்பால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு