யாழ்.காரைநகர் கடற்பரப்பில் 8 மீனவர்கள் கைது! அதிகாலையில் கடற்படை அதிரடி...

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகர் கடற்பரப்பில் 8 மீனவர்கள் கைது! அதிகாலையில் கடற்படை அதிரடி...

யாழ்.காரைநகர் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

காரைநகர் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் குறித்த 8 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படைமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மினவர்கள் ஜெயதாப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் படகில் 1. விஜி - சின்னத்தம்பி (வயது-28) 2.தினேஷ் - அஞ்சப்பன் (வயது-26) 3.ரஞ்சித் - குருநாதன் (வயது-27) 4. பக்ரிசாமி - சாமிநாதன் (வயது-45)

5.கமல் - (வயது-25) 6.புணுகு - சுருளி (வயது-41) 7. கார்த்திக் - (வயது-27) என்பவர்கள் இருந்ததாக கூறப்படுகின்றது. 

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு