கொழும்பு சென்ற இ.போ.ச பேருந்தை சோதனையிட்ட படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஆசிரியர் - Editor I
கொழும்பு சென்ற இ.போ.ச பேருந்தை சோதனையிட்ட படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தை இராணுவத்தினர் சோதனைக்குட்படுத்தியபோது பேருந்திலிருந்து பல லட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்ட சிறிய பொதியை சோதனையிட்ட போது இராணுவத்தினர் குறித்த போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளனர்.இதன்போது குறித்த பொதியில் ஐஸ் ரக போதைப்பொருள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை.பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 250 கிராம் எடை கொண்ட ஐஸ் ரக போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட ஐஸ் ரக போதைப்பொருள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு