சைவ மக்களின் மனங்களை புண்படுத்தவேண்டாம்! அமைச்சரவையில் டக்ளஸ் கண்டிப்பு, நோில் சென்று ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு..

ஆசிரியர் - Editor I
சைவ மக்களின் மனங்களை புண்படுத்தவேண்டாம்! அமைச்சரவையில் டக்ளஸ் கண்டிப்பு, நோில் சென்று ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு..

திருக்கோணேஷ்வரர் ஆலயத்தின் புனிதத்தை பாதிக்கும் வகையிலும், சைவ மக்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும் எந்த செயற்பாடும் இடம்பெறக்கூடாது. என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் பிரஸ்தாபித்துள்ளார். 

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எந்தவொரு மதத்தினரின் உணர்வுகளையும் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சரின் கருத்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே பத்திரிகை செய்தி மூலம் அறிந்திருந்தாகவும், அதுதொடர்பாக நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மதவிவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சரும் இணைந்து திருகோணமலைக்கான களவிஜயத்தினை மேற்கொண்டு நிலமைகளை நேரடியாக ஆராய்வதுடன் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி, 

இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமாயின் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு