மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபகரமாக உயிரிழப்பு..!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திருகோணமலை - ஆயிலியடி பகுதியில் நேற்று காலை இடம்பெற்றிருக்கின்றது.
மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் குறித்த பெண் வீழ்ந்து உயிரிழந்தார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த பெண் சிராஜ் நகர் - 97ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான ஆர்.பௌவுசியா (வயது 44) என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.