SuperTopAds

பாண் விலையை குறைக்க இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ள முயற்சி!

ஆசிரியர் - Editor I
பாண் விலையை குறைக்க இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ள முயற்சி!

பாணின் நிறையை குறைத்து 190 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர். 

300 கிராம் அல்லது 350 கிராம் வரை பாணின் நிறையை குறைத்து விற்பனை செய்யவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன தெரிவித்தார்.

நாட்டின் அநேகமான பேக்கரிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போதுள்ள நெருக்கடி நிலையில், சில பேக்கரி உரிமையாளர்களால்

எடை குறைந்த பாண் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக N.K. ஜயவர்தன குறிப்பிட்டார்.இதேவேளை, VAT, மின்சாரக் கட்டணம், நீர் கட்டணம் ஆகியவற்றின் அதிகரிப்பினால், 

எதிர்வரும் நாட்களில் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்தது. மின்சாரம் மற்றும் நீர் என்பன பண்ணை தொழிலுக்கு மிகவும் அவசியமென்பதுடன், 

VAT அதிகரித்திருப்பதால் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.