வடமாகாண மக்கள் இராணுவ இருப்பை விரும்புகிறார்கள்! நாடாளுமன்றில் சரத் வீரசேகர கூறிய கதை..

ஆசிரியர் - Editor I
வடமாகாண மக்கள் இராணுவ இருப்பை விரும்புகிறார்கள்! நாடாளுமன்றில் சரத் வீரசேகர கூறிய கதை..

வடமாகாணத்திலிருந்து இராணுவம் வெளியேறக்கூடாது. என மக்கள் நினைக்கிறார்கள் ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமே இராணுவ வெளியேற்றத்தை கோருகிறது. என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவிட்டு வரி சட்டமூலம்  தொடர்பான விவாதத்தின்போது வடக்கில் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளை தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறிய நிலையில், அதற்கு பதிலளிக்கையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டதாவது,

யுத்தக் காலத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பு காரணங்களுக்காக கைப்பற்றப்பட்ட காணிகளில் 90 வீதமானவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. மிகுதி காணிகளே பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகின்றனர். இராணுவம் இருப்பது யாழ்ப்பாண மக்களுக்கு அவசியமாகும். ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு மாத்திரமே இராணுவத்தினரை அங்கிருந்து அகற்ற வேண்டும் என குறிப்பிடுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பு காரணிகளின் நிமித்தமே இராணுவத்தினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இராணுவம் தொடர்பில் அரசியல் தரப்பினரே தவறான கருத்துக்களை குறிப்பிட்டுக்கொள்கிறார்கள் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு