உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் மீது துப்பாக்கி சூடு..!
உறவினர் விடொன்றிற்கு சென்றுவிட்டு மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை இனந்தொியாத ஆயுததாரிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் மித்தெனிய - சதொஸ்மாதாகம பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தொியவருவதாவது,
மனைவியுடன் உறவினர் வீட்டில் இருந்து தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.