தந்தை பிடுங்கிய தேங்காய் மகனின் தலையில் விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்த மகன்!
தந்தை தேங்காய் பறித்துக் கொண்டிருந்ததை அறியாமல் தென்னை மரத்தின் கீழே நடந்து வந்த மகனின் தேங்காய் விழுந்ததில் படுகாயமடைந்த மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் பதுளை மாவட்டத்தில் நமுனுகல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. தரம் 10ல் கல்வி கற்றும் குறித்த சிறுவன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில் தந்தை வீட்டு காணியில் நின்ற தென்னையில் தேங்காய் பறித்துள்ளார்.
இதன்போது வெளியே சென்றிருந்த மகன் தேங்காய் பிடுங்கப்பட்டுக் கொண்டிருப்பதை அறியாமல் தென்னை மரத்தின் கீழே சென்ற நிலையில் தந்தை பிடுங்கிய தேங்காய் தலையில் விழுந்து படுகாயமடைந்துள்ளான்.
இதனையடுத்து சிறுவன் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 31ம் திகதி இரவு உயிரிழந்துள்ளான். குறித்த விபத்து சம்பவம் கடந்த 29ம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.