SuperTopAds

100 ரூபாய் பணத்தை பறிப்பதற்காக சிறுவன் மீது கூரிய ஆயுதத்தால் சரமாரி தாக்குதல்! 7 மணிநேர சத்திர சிகிச்சை மூலம் சிறுவனை காப்பாற்றிய வைத்தியர்கள்...

ஆசிரியர் - Editor I
100 ரூபாய் பணத்தை பறிப்பதற்காக சிறுவன் மீது கூரிய ஆயுதத்தால் சரமாரி தாக்குதல்! 7 மணிநேர சத்திர சிகிச்சை மூலம் சிறுவனை காப்பாற்றிய வைத்தியர்கள்...

சிறுவனிடமிருந்து 100 ரூபாய் பணத்தை கொடுக்க மறுத்ததற்காக கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட 8 வயது சிறுவன் 7 மணிநேர சத்திர சிகிச்சைக்கு பின் வைத்தியர்களால் காப்பாற்றப்பட்டிருக்கின்றான். 

குறித்த சம்பவம் கந்தகெட்டிய - களுகஹகந்துர வெந்தேசியாய கிராமத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

00 ரூபா கோரிய நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் சிறுவனின் தாய் தெரிவித்ததாக பதுளை பொது வைத்தியசாலையில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சிறுவன், நேற்று மாலை 6 மணியளவில் தனது தந்தைக்கு தொலைபேசி மீள் நிரப்பு அட்டையை வாங்கி வருவதற்காக கடைக்குச் சென்றுள்ளான். 

அதன்போது, ​​வீதியில் நின்றிருந்த நபர் ஒருவர் சிறுவனிடம் இருந்த 100 ரூபா பணத்தை பெற்றுக் கொள்வதற்காக அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த சிறுவன் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இரவு 8.10 அளவில் சத்திரசிகிச்சை ஆரம்பிக்கப்பட்டதாகவும், 

அதிகாலை 3 மணிவரை சிகிச்சை தொடர்ந்ததாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.சிறுவனின் தோற்பட்டை மற்றும் மார்புப் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும், 

ரு பகுதியில் கூரிய ஆயுதம் நுரையீரல் வரை ஊடுருவியிருந்ததாகவும், வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். 

தாக்குதல் நடத்திய நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர் மனநோயினால் பாதிக்கப்பட்டவரென தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.