நோயாளர் காவுவண்டி வரவில்லை!! -கர்ப்பிணியை தள்ளுவண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற கணவர்-

ஆசிரியர் - Editor II
நோயாளர் காவுவண்டி வரவில்லை!! -கர்ப்பிணியை தள்ளுவண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற கணவர்-

பிரவச வலி ஏற்பட்ட கர்ப்பிணியை உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நோயாளர் காவுவண்டி வராததால் கணவர் அவரை தள்ளுவண்டியில் வைத்தியசாலைக்கு கணவர் தள்ளிச் சென்ற சம்பவம் ஒன்று மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. 

இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தின் ரானே கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக '108' நோயாளர் காவுவண்டிக்கு கணவர் தொலைபேசி அழைப்பு செய்தார்.

இருப்பினும் 2 மணி நேரமாக நோயாளர் காவுவண்டி வரவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் தவித்த அவர், தனது மனைவியை தள்ளுவண்டியில் வைத்து அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றார். 

அவரது கிராமத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் இருந்த அந்த மையத்தில் வைத்தியரோ, தாதியர்களோ இல்லை. பின்னர் அரச நோயாளர் காவுவண்டி ஒன்றில் அங்கிருந்து ஹட்டாவுக்கு தனது மனைவியை அழைத்து சென்றார்.

அங்குள்ள வைத்தியசாலையிலும் சரியான சிகிச்சை கிடைக்காததால், பின்னர் தமோ மாவட்ட தலைமை வைத்தியசாலைக்கு கர்ப்பிணி மாற்றப்பட்டார். அங்கு அவர் வைத்தியர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். 

இதற்கிடையே கர்ப்பிணி ஒருவரை அவரது கணவர் தள்ளுவண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைப்பார்த்த மாவட்ட சுகாதார அதிகாரிகள், இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு