SuperTopAds

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடன்! உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது சர்வதேச நாணய நிதியம்..

ஆசிரியர் - Editor I
இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடன்! உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது சர்வதேச நாணய நிதியம்..

இலங்கைக்கு சுமார் 2.9 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் - இலங்கை அரசாங்கம் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 

இலங்கை 48 மாதங்களில் மொத்தத் தொகையையும் தவணை முறையில் பெற உள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக 

இந்தத் தொகை வழங்கப்படுவதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்குள் 2.3 சதவீத முதன்மை அபிவிருத்தியை அடைவதே இதன் முதன்மையான நோக்கமாகும் என்றும் அது மேலும் கூறுகிறது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுடன் நடத்திய பல சுற்று பேச்சுக்களின் விளைவாக இந்த கடன் வழங்கப்பட உள்ளது.