எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு..!
டீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் வினைத்திறனானதாக மாற்றப்பட்டுள்ளது. என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
கடந்த 4 நாட்களில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு அதிகளவான கையிருப்பு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் ஊடாக நாளாந்தம் 4,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 3,000 மெற்றிக் தொன் பெற்றோல் விநியோகிக்கப்படும்.
இதன்படி, பஸ்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
மேலும் 35,000 மெற்றிக் தொன் பெற்றோல் 92 இறக்கப்பட உள்ளதாக அமைச்சர் நேற்றைய தினம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.