சமையலறையில் பூனை மலம்! 8 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை, 30 உணவகங்களில் திடீர் சோதனை..
கொழும்பு - கோட்டை மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள உணவகங்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில் மனித நுகர்வுக்கு உகந்த உணவு தயரிப்பதற்கு தகுதியற்ற உணவகங்களை நடத்திய 8 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
கடந்த 28ஆம் திகதி சுமார் 30 உணவகங்கள் மீது இந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, இராஜகிரியவில் உள்ள பிரபல உணவகத்தின் சமையல் அறையில் பூனை மலத்தை கண்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் அந்த உணவகம் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
இந்த பரிசோதனையின்போது, சில கடைகளில் சமைத்த உணவுகளுடன் இறைச்சி மற்றும் மீன் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதை சுகாதார அதிகாரிகள் அவதானித்துள்ளனர். மேற்படி எட்டு உணவாக உரிமையாளர்களும் கொழும்பு அளுத்கடை
மற்றும் கங்கோடவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த உணவக உரிமையாளர்களுக்கு தலா 82,500 ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.