13 வயதான பாடசாலை மாணவனின் சப்பாத்திற்குள் இருந்த பாம்பு! தெய்வாதீனமாக உயிர் தப்பினான்..
பாடசாலை மாணவன் ஒருவன் தனது சப்பாத்திற்குள் ஏதோ நெளிவதை உணர்ந்து சப்பாத்தை கழற்றியபோது உள்ளெ சிறிய பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளான்.
இதனையடுத்து பாடசாலை மாணவன் லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிறுவனை பாம்பு தீண்டவில்லை எனவும் சிறுவன் நலமாக உள்ளான் எனவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
குறித்த சம்பவம் கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 13 வயதான மாணவனுக்கு நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு மாணவன், பேருந்தில் வந்து கொண்டிருந்த தனது சப்பாத்திற்குள் ஏதோ நெளிவதை உணர்ந்துள்ளான்.
பின்னர் பாடசாலைக்கு வந்து சப்பாத்தை கழற்றினான். உள்ளே குட்டி பாம்பு இருந்ததை கண்டு அனைவரும் பதறிப்போயுள்ளனர். ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
இது தொடர்பில், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜே.விஜேசூரிய தெரிவிக்கையில், மாணவனை பாம்பு தீண்டியிருக்கவில்லை என வைத்திய பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவன் நலமுடன் உள்ளார் என தெரிவித்துள்ளார். இந்த பாம்புக் குட்டி வீட்டில் வைத்து மாணவனின் காலணிக்குள் புகுந்திருக்கலாம் எனவும், மாணவன் அதை கவனிக்காது காலணியை அணிந்து வந்திருக்கலாம் எனவும் தெரிய வருகிறது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர், காலணிகளை அணிவதற்கு முன்னர் அதன் உட்புறத்தை பரிசோதிக்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.