யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான பயண நேரத்தை 1 மணித்தியாலத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை!
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான ரயில் பயணத்தை மேலும் 1 மணித்தியாலத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அவர், வடமாகாண போக்குவரத்து சேவைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
வடக்கு புகையிரதத்தின் மஹவ முதல் வவுனியா வரையிலான பகுதி மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் கொழும்பு – யாழ். ரயில் பயண நேரம் 1 மணித்தியாலத்தால் குறைக்கப்படும்.
எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.