மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு!
மண்ணெண்ணெய்யை நம்பியிருக்கும் குறைந்த வருமானம பெறும் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணெய் விலைத் திருத்தத்துக்கான அவசியம் பல ஆண்டுகளாக நிலவி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்பட்டமை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்க ஒரு காரணியாக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 340 ரூபாவாக அதிகரித்துள்ளது.