முட்டைக்கு விலை நிர்ணயம் ஒரு பம்மாத்துவேலை..! இப்போதும் 60 தொடக்கம் 65 ரூபாய் வரை விற்கப்படும் முட்டை..
முட்டைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டமையானது ஒரு பம்மாத்து வேலை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
நுகவோர் விவகார அதிகார கடந்த 19 ஆம் திகதி நள்ளிரவு முதல் முட்டை விலையினை நிர்ணயம் செய்து வர்த்தமானி ஒன்றினை வெளிட்டிருந்தது.
இதற்கமைய வெள்ளை முட்டை ஒன்றினை விலைய 43 ரூபாவாவும் சிவப்பு முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் நிர்ணயம் செய்து வெளியிட்டிருந்த போதிலும்,
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 60 ரூபா முதல் 65 ரூபா வரை விற்பனை செய்து வருவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த நாட்டில் பொது மக்கள் நலன் கருதி வெளியிடப்படும் எந்த ஒரு சட்டமும் அல்லது அறிவுறுத்தல்களும் எந்த வர்த்தகரும் பின்பற்றுவதில்லை எனவும்
இதற்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளோ பொறுப்பு வாய்ந்த உத்தியோகஸ்த்தர்களோ நடவடிக்கை எடுப்பதில்லை எனவும்
பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.அரசாங்கம் அத்தியவசிய பொருட்களுக்கு விலை அதிகரிக்கும் போது,
வர்த்தகர்கள் உடன் விலையை அதிகரிப்பதாகவும் விலை குறையும் போது விலை குறைப்பு இடம்பெறுவதில்லை எனவும் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாட்டு மக்கள் பொருளாதார வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வர்த்தக சமூகம் இவ்வாறு பொது மக்களிடம் இருந்து
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிவது போல் நடந்து கொள்வது மிகவும் மோசமான நிலை எனவும் பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.