கடை ஒன்றுக்குள் புகுந்து உரிமையாளரை கத்தியால் வெட்டிவிட்டு திருட முயற்சித்த 13 வயது சிறுவன் கைது!
கடை ஒன்றிற்குள் புகுந்து கத்தியால் வெட்டி பணத்தை திருட முயற்சித்த 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பண்டாரகம நாமலுவ பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
குறித்த சிறுவன் கடை உரிமையாளரான பெண்ணை கத்தியால் தாக்கி திருட முற்பட்டபோது, கடை உரிமையாளர் அதனைத் தடுத்துள்ளார்.
பின்னர் சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
தாக்குதலின் காரணமாக 33 வயதான கடை உரிமையாளரின் வயிறு மற்றும் வலது கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவன் இதற்கு முன் பலமுறை கடைக்கு வந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக கடை உரிமையாளர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சந்தேகநபரின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.