நிறை மதுபோதையில் 8 வயது சிறுவனை துாக்கி கால்வாயில் வீசிய கிராம சேவகர் கைது! சிறுவன் காயத்துடன் மீட்பு...

ஆசிரியர் - Editor I
நிறை மதுபோதையில் 8 வயது சிறுவனை துாக்கி கால்வாயில் வீசிய கிராம சேவகர் கைது! சிறுவன் காயத்துடன் மீட்பு...

நிறை மதுபோதையில் 8 வயதான சிறுவனை கால்வாயில் துாக்கி எறிந்த கிராமசேவகர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்த சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

பொல்கஹவெல பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல, உடபொல கிராம உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கால்வாய் கரையில் யானை ஒன்று நீராடிக் கொண்டிருந்ததை குறித்த சிறுவன் பார்த்துக் கொண்டிருந்துள்ளான். குடிபோதையில் அங்கு வந்த சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் சிறுவனை தூக்கி கால்வாயில் வீசியுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கால்வாயில் வீசப்பட்ட சிறுவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபரான 54 வயதுடைய கிராம உத்தியோகத்தர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு