SuperTopAds

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம் தௌபீக் இடமாற்றம்-பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு

ஆசிரியர் - Editor III
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம் தௌபீக் இடமாற்றம்-பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

டாக்டர் ஏ.ஆர்.எம் தௌபீக் இடமாற்றம்-பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு


இடமாற்றலாகி செல்லவுள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம் தௌபீக் அவர்களுக்கான  பிரியாவிடை  நிகழ்வு  கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெறவுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் எதிர்வரும் சனிக்கிழமை(20) அன்று  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ ஆர் எம் தௌபீக்கின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் பிரியாவிடை  நிகழ்வு சிறப்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இதன் போது கொழும்பு மாவட்டத்திற்கு இடமாற்றலாகி செல்லவுள்ள  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்திய கலாநிதி ஏ ஆர் எம் தௌபீக்  கடந்த  2021.04.09 கடமை ஏற்ற காலங்களில் கொவிட் தொற்றுக்கு மத்தியில் இன மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதுடன் இந்நிகழ்வில்  மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை  பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சம்மாந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கடந்த காலங்களில் வெலிசர சுவாச நோய்களுக்கான தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளராகவும்   நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் ராகம போதனா வைத்தியசாலை  ஆகியவற்றின் வைத்திய அத்தியட்சகராகவும் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் ஆய்வு கூடங்களுக்கான  அத்தியட்சகராகவும் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிதாக  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் கொஸ்தா அவர்களை வரவேற்கும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை(19) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெறவுள்ளது.

மேற்குறித்த நிகழ்வுகளுக்கான  ஒழுங்குகளை  கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.பி.ஏ வாஜித்  திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம் மாஹிர்  உள்ளிட்ட பிராந்திய பொறுப்பு வைத்திய அதிகாரிகள குழுவினர்  மேற்கொண்டுள்ளனர்.