இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த ஸ்கொட்லாந்து சுற்றுலா பயணியை காணவில்லையாம்!

ஆசிரியர் - Editor I
இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த ஸ்கொட்லாந்து சுற்றுலா பயணியை காணவில்லையாம்!

அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றமைக்காக வீசா ரத்துச் செய்யப்பட்டு நாடு கடத்தப்படவிருந்த ஸ்கொட்லாந்து சுற்றுலாப் பயணி கெய்லி பிரேசரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடந்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது. 

தம்மை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்ய கோரி கெய்லி பிரேசர் செய்த விண்ணப்பத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்திருந்தது.

சமூக ஊடகங்களில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பாக உள்ளடக்கத்தை வெளியிட்ட குறித்த ஸ்கொட்லாந்து சுற்றுலாப் பயணி கெய்லி ஃப்ரேசருக்கு வழங்கப்பட்ட விசாவை நிறுத்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி 

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் முடிவு செய்தது. ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறும் திணைக்களம் அவருக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு