வெளிநாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உள்நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் விமான நிலையத்தில் தனியான பாதை! அடுத்த மாதம் திறப்பு...
தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் இலங்கையில், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு விமான நிலையத்தில் தனியான உள்நுழையும் பாதை மற்றும் வெளியேறும் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 1ம் திகதி உத்தியோகபூர்வமாக திறக்கப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை பணியாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை தவிர்ப்பதே இதன் நோக்கம்
என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.மேலும், இதன் மூலம் சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்பவர்களை அடையாளம் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.