SuperTopAds

புலம்பெயர் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம், ஜனாதிபதி கூறுகிறார்..

ஆசிரியர் - Editor I
புலம்பெயர் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம், ஜனாதிபதி கூறுகிறார்..

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் வாழும் மக்களிடமிருந்து உதவிகளை பெறுவதற்காக இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். 

நாட்டை மீட்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் தற்போது, நாட்டைக் கட்டியெழுப்ப பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், 

அதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு தேவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான பணிக் குழாம்மட்ட ஒப்பந்தம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், 

அந்த உடன்படிக்கை இலங்கைக்கு சிறந்த நம்பிக்கையைக் கொடுக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.