பூநகரி - மன்னார் பகுதிகளில் 500 மில்லியன் டொலர் செலவில் பாரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள்! மின்சக்தி அமைச்சர் அறிவிப்பு, அதானி குழுமத்தினால்..

ஆசிரியர் - Editor I
பூநகரி - மன்னார் பகுதிகளில் 500 மில்லியன் டொலர் செலவில் பாரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள்! மின்சக்தி அமைச்சர் அறிவிப்பு, அதானி குழுமத்தினால்..

பூநகரி மற்றும் மன்னார் பகுதிகளல் சுமார் 500 மில்லியன் டொலர் செலவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு அதானி கிறீன் எனர்ஜி நிறுவனத்திற்கு இலங்கை மின்சாரசபை மற்றும் நிலையான அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன தற்காலிக ஒப்புதலை வழங்கியுள்ளன. 

மேற்படி தகவலை மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதிக்க இலங்கை மின்சார சபை மற்றும் நிலையான அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் நேற்று சந்தித்தனர்.

இந்தியாவின் அதானி கிறீன் எனர்ஜி நிறுவனம் மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவாட் திறன் கொண்ட 2 காற்றாலை திட்டங்களுக்கு 500 மில்லியன் டொலர் முதலீடு செய்ய தற்காலிக ஒப்புதல் வழங்கப்பட்டது. இலங்கை மின்சார சபை சட்டத் திருத்தங்களால் தாமதமான 46 திட்டங்களில் 21 திட்டங்கள் 

அடுத்த வாரம் மின் கொள்வனவு உடன்படிக்கைகளில் நுழையும். மற்ற திட்டங்கள் 30 நாட்களுக்குள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு