இளைஞர்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை
யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா (Youth Alliance Sri Lanka) அமைப்பின் ஏற்பாட்டில் “சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்களின் தலைமைத்துவம்” என்ற தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை மற்றும் புத்தாக்க சிந்தனை தொடர்பான விழிப்புணர்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(13) ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பிரதான வளவாளராகவும் இந் நிகழ்சித் திட்டத்தின் பிராதானியான இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பொறியியலாளர் எம்.ஏ சஜா கலந்து கொண்டதுடன் அமைப்பின் தலைவர் இஷட்.எம் ஸாஜீத் மற்றும் செயலாளார் சரோத் சுஜா மற்றும் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களின் வழிகாட்டலில் இடம் பெற்றது.
இவ் நிகழ்சியில் பிரதம அதிதியாக இலங்கை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் கெளரவ உறுப்பினரும் முன்னால் சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதீக செயலாளாருமான ஏ.எல்.எம் சலீம் மற்றும் விஷேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.எம் ஆஸீக் கௌரவ அதிதிகளாக முன்னால் கொழும்பு பல்கலைக்கழகத்தினுடைய சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம் சதாத், சிரேஷ்ட தொலைக்காட்சி மற்றும் வானொலி அறிவிப்பாளரும் அறம் தொலைக்காட்சியின் பிரதான தலைமை அதிகாரியுமான எஸ்.டி ரொசன் அஷ்ரப், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கா நாட்டுக்கான தூதரகத்தின் உத்தியோகத்தர் நௌஷாட் ஏ ஜப்பார், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பொறுப்பாளர் எம். எஸ். எப். ஸாமிர் மற்றும் புத்தாக்க சிந்தனை தொடர்பான வளவாளர்களாக கலந்து கொண்ட இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பொறியியலாளர் எம். என். ஏ. ஹினாஸ், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட விரிவுரையாளர் பொறியியலாளர் என். டி. எம். சாஜித் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்சியில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளுக்கு விரிவுரைகளை வழங்கினார்கள்.
இப் பயிற்சிப் பட்டறையில் பல் வேறு பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டதுடன் இறுதியில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.