எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR குறியீடு பரிசோதிக்கும் பணியிலிருந்த அபிருத்தி உத்தியோகஸ்த்தர் மீது தாக்குதல்!
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR குறியீட்டை பரிசோதிக்கும் கடமையில் இருந்த அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கிய பொதுஜன பெரமுன உள்ளுராட்சி சபை உறுப்பினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று காலை பாந்துராகொடவில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றிருக்கின்றது. அங்கு QR குறியீடுகளை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீரிகம பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்
ஒருவரே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார். சந்தேக நபர் திவுலபிட்டிய உள்ளூராட்சி சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் என்பதுடன் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.