பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான நபரை விடுவிக்ககோரி அழுத்தம் கொடுத்த சகல பொலிஸார் மீதும் விசாரணை!
பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான மதகுரு என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபரை விடுவிக்கமாறு அழுத்தம் கொடுத்த பொலிஸ் உயர் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண தொிவித்துள்ளதாவது,
உணவடுன, மெடரம்ப பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் பூசாரி ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட பின்னர் தென் மாகாணத்தில் பொலிஸ் உயரதிகாரிகள் பலர்
சந்தேகநபரை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.