வடகொரிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்றா? -கடும் காய்ச்சலால் அவதிப்படுவதாக சகோதரி தகவல்-
வடகொரியா ஜனாதிபதி கிம்ஜோங் உன் கடுமையாக காய்ச்சலால் அவதியுற்றுவருவதாகவும் அவரது சகோதரி தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினை எதிர்கொள்வதில் வடகொரியா தனது தன் பாணியில் நடவடிக்கை எடுத்தது. பாதிப்பு எண்ணிக்கையை வெளிப்படையாக உலகிற்கு காட்டவில்லை. மாறாக கொரோனா தொற்று பாதிப்பு என்று குறிப்பிடாமல் 'காய்ச்சல்' என கொரோனா தொற்றை மறைமுகமாக வடகொரியா குறிப்பிடுகிறது.
இந்நிலையில், வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சகோதரியும், ஜனாதிபதிக்கு அடுத்து இரண்டாவது அதிகாரம் மிக்க தலைவராக வரவிருக்கும் 'கிம் யோ ஜோங்க்' அரசு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அறிவித்துள்ளதாவது:-
கொரோனா பாதிப்பை வட கொரியா வெற்றிகரமாக தாண்டி வந்துள்ளது. இந்த பாதிப்பின் போது ஜனாதிபதி கிம் ஜோங் உன் கடும் காய்ச்சலுக்கு ஆளானர். இருப்பினும் உலக சுகாதார வரலாற்றில் ஒரு அதிசயத்தை வட கொரியா நிகழ்த்தி காட்டியது.
நமது வெற்றி என்பது வரலாற்று வெற்றியாகும். நம் நாட்டில் கொரோனா பரவலை திட்மிட்டே தென் கொரியா ஏற்படுத்தியது. இதற்கு அந்நாட்டிற்கு வட கொரியா தக்க பதிலடி தரும் என்றார்.