மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கால்மேசைப்பந்து விளையாட்டினை அறிமுகம் செய்த அஸ்பக் அகடமி
இலங்கையின் 71 ஆவது விளையாட்டாக இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சில் பதிவு செய்யப்பட்ட கால் மேசைப்பந்து (Teqball) விளையாட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அறிமுகம் செய்யும் நிகழ்வும்,சர்வதேச சம்மேளனத்தினால் இணைய வழியில் இடம்பெற்ற Level -C கால்மேசைப்பந்து விளையாட்டின் நடுவர் பரீட்சையில் சித்தியடைந்த நடுவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் 10.08.2022 புதன்கிழமை மாலை 3:30 மணியளவில் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேசிய சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளரும் asspek அகாடமியின் பணிப்பாளருமான alm. இர்பான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசசபைத் தவிசாளர் AM. நௌபர் அவர்களும் சிறப்பு அதிதியாக சிரேஸ்ட சட்டத்தரணி M. ராசிக் (LLB) அவர்களும் கலந்து சிறப்பித்ததோடுஏனைய அதிதிகளாக ALM. Irsath(asspek விளையாட்டுக்கழக தலைவர்), BV. பிஸ்தாமி ரவுப்(முன்னால் விளையாட்டு உத்தியோகத்தர்),M. சாதாத்( GS), சஜிமி (GS)M. ஷாஜகான் (மனிதம் அமைப்பின் செயலாளர் ),ALM. லியாப்தீன் JP, ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்..
இந்நிகழ்வின் போது கால்மேசை அறிமுகம் , கால்மேசைப்பந்து விளையாட்டு,Teqbatti நடுவர்கள் சீருடை அறிமுகம் என்பன நிகழ்ந்ததோடு, நடுவர் பரீட்சையில் சிந்தியடைந்த 35 நடுவர்வர்களுக்கான அடையாள அட்டை, சான்றிதழ்கள் மற்றும் சீருடை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.