பாராளுமன்றில் இடம்பெற்ற தேனீர் விருந்துக்கான செலவு 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை தன் சொந்த நிதியிலிருந்து வழங்கிய ஜனாதிபதி..
நாடாளுமன்றத்தின் 9வது கூட்டத்தொடர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட தேனீர் விருந்துபசாரத்திற்கான பணத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது சொந்த பணத்திலிருந்து வழங்கியுள்ளார்.
09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தேநீர் விருந்தளித்தார்.
இந்த தேநீர் விருந்துபசாரத்திற்கு செலவான 272,000 ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி செலுத்தியுள்ளார். ஜனாதிபதி விக்ரமசிங்கவின் சார்பில் பாராளுமன்ற விவகாரங்கள்
தொடர்பான ஜனாதிபதியின் செயலாளரான ஆஷு மாரசிங்க இதற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.