SuperTopAds

கட்டுமான பணி நடக்கும் கட்டிடத்திலிருந்து விழுந்த இரும்பு கம்பி! மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி...

ஆசிரியர் - Editor I
கட்டுமான பணி நடக்கும் கட்டிடத்திலிருந்து விழுந்த இரும்பு கம்பி! மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி...

புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடம் ஒன்றிலிருந்து கழன்று விழுந்த இரும்பு குழாய் ஒன்று எரிபொருளுக்கு வரிசையில் நின்ற கார் மீது விழுந்த நிலையில் காருக்குள் இருந்த சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். 

கொழும்பு நகரில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த குழாய் காரின் கண்ணாடியை உடைத்து காரின் உள்ளே விழுந்ததாகவும், 

இதன் போது காரின் சாரதியும் காருக்குள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். குறித்த கட்டிடமானது பிரபல ஆடை நிறுவனமான ஒடெல் நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமானது. 

என்பது குறிப்பிடத்தக்கது.