லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்!! -பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம்-

ஆசிரியர் - Editor II
லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்!! -பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம்-

லண்டனில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மீது சரமாரியாக நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் அவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

கிழக்கு லண்டனில், கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு குறித்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. 18 வயதேயான குலாம் சாதிக் என்ற இளைஞர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில், சம்பவயிடத்தில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவரையும் இதுவரை கைது செய்யவில்லை. கொலை செய்யப்பட்ட குலாம் சாதிக் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சிறப்பு அதிகாரிகள் அவர்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், உடற்கூராய்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் லண்டன் நகரில் வாள்வெட்டு சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இஸ்லிங்டனில் உள்ள பூங்கா ஒன்றில் வியாழக்கிழமை 15 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு சம்பவயிடத்தில் பலியாகியுள்ளார்.

குலாம் வழக்கில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பொலிஸாருக்கு உதவ முன்வர வேண்டும் எனவும்,தாக்குதலில் ஈடுபட்ட குழு தொடர்பில் தகவல் அறிந்த மக்கள் விசாரணை அதிகாரிகளை நாடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு