மின்கட்டண திருத்தம் தொடர்பில் இன்று சந்திப்பு! வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு..
மின் கட்டண திருத்தம் தொடர்பிலான அறிவிப்பு நாளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும். என தொிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று நிதி அமைச்சு, வலுசக்தி அமைச்சு மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியனவற்றிக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
புதிய கட்டண திருத்தம், மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
புதிய கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களிடம் முன்னதாக கோரியிருந்தது.
இதற்கமைய, கிடைப்பெற்ற யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து புதிய மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.