இரு நபர்களுக்கிடையிலான மோதலில் பொல்லால் அடித்துக் கொல்லப்பட்ட வயோதிபர்!

ஆசிரியர் - Editor I
இரு நபர்களுக்கிடையிலான மோதலில் பொல்லால் அடித்துக் கொல்லப்பட்ட வயோதிபர்!

இரு நபர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பொல்லால் தாக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் கொழும்ப - கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் உடக பிரிவு தொிவித்துள்ளது. 

வத்தளை-ஹூனுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயது வயோதிபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

ம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு