SuperTopAds

QR குறியீடு தொடர்பாக எரிசக்தி அமைச்சு நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள விசேட அறிவுறுத்தல்..!

ஆசிரியர் - Editor I
QR குறியீடு தொடர்பாக எரிசக்தி அமைச்சு நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள விசேட அறிவுறுத்தல்..!

QR குறியீட்டினை இரத்துச் செய்து தேவையாயின் புதிய QR குறியீட்டினை பெறுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியிருக்கின்றார். 

இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் மேலும் அவர் கூறியுள்ளதாவது. எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் ஊடாக பெறப்படும் QR குறியீட்டை வேறு எவருக்கும் காட்சிப்படுத்தக் கூடாது.

தமக்குச் சொந்தமான QR குறியீட்டைப் பயன்படுத்தி வேறு எந்த நபரும் எரிபொருளைப் பெற முடியாதபடி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.