நீதிமன்றத்திற்குள் புகுந்து சாட்சி மீது துப்பாக்கி சூடு! வானத்தை நோக்கியும் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு துப்பாக்கிதாரி தப்பி ஓட்டம்..
கொழும்பு - கல்கிசை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்தில் வழக்கு ஒன்றின் போது சாட்சியமளித்துக்கொண்டிருந்த சாட்சியொன்றை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இலக்கு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து சந்தேகநபர் நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்களை அச்சுறுத்தி மீண்டும் ஒருமுறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும்,
அதன் பின்னர் அவர் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.