நாட்டில் அச்சுறுத்தும் வகையில் அதிகரிக்கும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் எண்ணிக்கை..!
நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன கூறியுள்ளார்.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக, மரண வீதமும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மக்கள் வெளியில் செல்லும் போதும், பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்தும் போதும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.