SuperTopAds

சம்மாந்துறையில் சமூக சேவைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு ஒன்றிய அங்குரார்ப்பண நிகழ்வு.

ஆசிரியர் - Editor III
சம்மாந்துறையில் சமூக சேவைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு ஒன்றிய அங்குரார்ப்பண நிகழ்வு.

சம்மாந்துறை சமூக சேவைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு ஒன்றிய அங்குரார்ப்பண நிகழ்வு அமைப்பின் தலைவர் பொறியியலாளர் ஏ.சி. பஸீல் தலைமையில் அம்பாறை வீதி சம்மாந்துறையில் அமைந்துள்ள அமைப்பின் தலைமையகத்தில் புதன்கிழமை (03)   இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.எம். நௌசாத் அவர்கள் கலந்து கொண்டதுடன் மேலும் கௌரவ அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். எம். ஹனீபா, உதவிப்பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.வி. சலீம், சமூக சேவை உத்தியோகத்தர், சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ், கிழக்கு மாகாண கணனி தொழிநுட்ப பேரவையின் பணிப்பாளர் யூ. எல்.என். ஹுதா, இளைஞர் சேவை அதிகாரி பைசல் அமீன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான், அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவை தலைவர் எஸ்.எல். ஜலீல் ஜீ,  உட்பட உலமாக்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், சம்மாந்துறை சமூக சேவைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு ஒன்றிய நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இருந்து பல்வேறு கல்வி வள, சமூக நல, வாழ்வாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்திருந்த இந்த அமைப்பானது தனது அலுவலக திறப்பு விழாவை முன்னிட்டு வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இதன்போது வழங்கி வைத்ததுடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளையும் வழங்கிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.