கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுளுக்கு Call Centre
கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்காக Call Centre (அழைப்பு நிலையம்) எனும் விசேட கருமபீடம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபின் ஆலோசனை, வழிகாட்டலில் கல்முனை மாநகர சபையின் பழைய கட்டிடத்தொகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்நிலையத்தில் பொது மக்கள் தமது முறைப்பாடுகளை அலுவலக நேரத்தில் 0672030000 எனும் Hotline இலக்கத்திற்கோ அல்லது நேரடியாக வருகைதந்து வாய்மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தெரிவிக்க முடியும்.
திண்மக்கழிவகற்றல் சேவை, தெருவிளக்கு பராமரிப்பு, வடிகான் பராமரிப்பு உட்பட மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற எந்தவொரு சேவை தொடர்பிலும் இவ்வாறு முறைப்பாடளிக்க முடியும்.
கொரோனா பெருந்தொற்று, எரிபொருள் தட்டுப்பாடு உட்பட நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,பொது மக்கள் சிரமமின்றி இலகுவாகவும் விரைவாகவும் தமது முறைப்பாடுகளை முன்வைத்து, உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த Call Centre கரும பீடத்தை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொது மக்கள் முறையாக பயன்படுத்தி, ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.