"கோட்டா கோ கம" போராட்டக்காரர்களை வெளியேறுமாறு பணிப்பு! வெள்ளிக்கிழமை மாலை 5 மணிவரை அவகாசம்..
காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் "கோட்டா கோ கம" போராட்டக்காரர்களை வெள்ளிக்கிழமை 5ம் திகதி மாலை 5 மணிக்கு முன் அங்கிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக போராட்டக்காரர்களை அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு பொலிஸ் அதிகாரிகள் குழு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து கட்டமைப்புகளையும் அகற்றிவிட்டு அந்தப் பகுதியை காலி செய்யுமாறு போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையிலும் உறுதிப்படுத்திப்படுத்தப்பட்டுள்ளது.