எரிசக்தி அமைச்சர் நாட்டு மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை! பொதுமக்களே முறைப்பாடு வழங்கலாம், தொலைபேசி இலக்கமும் அறிமுகம்..
நாடு முழுவதும் கியூ ஆர் நடைமுறையின் கீழ் எரிபொருள் வழங்கும் நடவடிக்கைய நேற்று தொடக்கம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கியூ ஆர் நடைமுறையை மீறி எரிபொருள் வழங்குவோர் மற்றும் பெறுவோர் தொடர்பாக முறைப்பாடு வழங்கும்படி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
கியூ.ஆர். குறியீட்டை பயன்படுத்தாது எரிபொருட்களை பெறுபவர்கள் மற்றும் வழங்குபவர்கள் குறித்த படங்கள் மற்றும் வீடியோக்களை வட்ஸ்அப் மூலம் 0742123123 என்ற தொலைபேசி எண்ணுக்கு அனுப்பபும்படி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் சட்டவிரோதமாக எரிபொருட்களை சேகரிப்பவர்கள், அமைச்சின் அறிவுரைகளுக்கு ஏற்ப செயற்படாத ஊழியர்கள், போலியான கியூ.ஆர். குறியீடுகள், போலியாக வாகனப் பதிவு எண்களை அச்சிடும் நபர்கள் அல்லது குழுக்கள் பற்றிய படங்கள் மற்றும் வீடியோக்களை மேற்கூறிய தொலைப்பேசி எண்ணுக்கு வட்ஸ்அப் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளதுடன்,
குறித்த தகவல்கள் பொலிஸாரிடம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஒவ்வொரு மாதத்தினதும் 01 ஆம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலைகளின் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.