SuperTopAds

தேசிய எரிபொருள் அட்டைக்கான எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விடுத்துள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
தேசிய எரிபொருள் அட்டைக்கான எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விடுத்துள்ள அறிவிப்பு..!

நாடு முழுவதும் QR கோட் முறைக்கான எரிபொருள் ஒதுக்கீடு முறை இன்று (ஜூலை 31) நள்ளிரவில் புதுப்பிக்கப்படும்.  ஒவ்வொரு வாகனத்துக்குமான எரிபொருள் ஒதுக்கீட்டின் அளவு அடுத்த வாரமும்  அதே கோட்டாவாகவே இருக்கும்.

மேற்கண்டவாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும்  QR அமைப்பு பயன்படுத்தப்படும்.  அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் QR அமைப்புடன் மட்டுமே எரிபொருளை விநியோகிக்கவும் மற்றும் விவரங்களைச் சரிபார்க்க வாகனத்தின் இலக்கத்தகட்டில் வாகன எண்ணைச் சரிபார்க்கவும்.