நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை! உச்சம் தொட்டுள்ள பிற்பொக்கட் திருட்டு..
நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பொது போக்குவரத்தில் இடம்பெறும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் , அரச பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் என்பவற்றை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்போது மக்களின் பயணப்பைகள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளையிடப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.எனவே பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள்
இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.