கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய கணவனும், மனைவியும் வெளிநாடு தப்பிச் செல்வதற்கு முயற்சித்த நிலையில் கைது..!
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் என்று தொடரில் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்ட கணவனும் மனைவியும் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக துபாய்க்கு தப்பிச்செல்ல முயற்சித்த நிலையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் குறித்த இருவருக்கும் வெளிநாடு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.